யாழில் . தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி


நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார்.

மேற்படி நபர் பாதுகாப்பற்ற வயல் கிணற்றில் சடலமாக காணப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பொலிசருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு இன்று (27) மாலை சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் அப்பகுதியில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும் அவற்றை காணி உரிமையாளர்கள் பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பானதாக செய்ய வேண்டும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *