6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, பின்வரும் பொருட்களின் விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருகிறது.
ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 375 ரூபாவாகும்.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 149 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 198 ரூபாவாகும்.
ஒரு கிலோ சிவப்பு பருப்பும் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.
ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு பச்சரிசி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 164 ரூபாவாகும்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை பச்சரிரி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 179 ரூபாவாகும்.
Related Post

வவுனியாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது
வவுனியா நகர்ப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்களை [...]

மேலும் 17 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் [...]

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த [...]