10 வயது சிறுமி துஷ்பிரயோகம் – 4 பேர் கைது

வெலிகமவில் பத்து வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்வி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியை துஷ்பிரயோகம் செய்ததுடன், சந்தேக நபர்கள் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்து தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து, தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இருபது வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் புதன்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
துஷ்பிரயோகத்துக்கு ஆளான மாணவி, பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் இராஜினாமா
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். [...]

தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க [...]

ரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு
கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக [...]