யாழில் 250 கிராம் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் நேற்றைய தினம் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை விசேட குற்றத்தடுப்பு பொலிசாரால் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 250 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்