யாழில் சடுதியாக அதிகரித்துள்ள கடல் உணவுகளின் விலை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

காலநிலை வேறுபாடினால் யாழில் கடல் உணவுகளின் விலை அதிகரித்துள்ளது நகர்பகுதிகளிற்கு தேவையான கடல் உணவுகள் வந்து சேராமையால் கடல் உணவுகளின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக பாஷையூர்,கொட்டடி,குருநகர், நாவாந்துறை மீன் சந்தைகளில் இவ்வாறு விலைகள் அதிகரித்துள்ளன.

ஆகையால் ஒரு கிலோ இறால் 2ஆயிரம் ரூபாவாகவும் ஒரு கிலோ நண்டு ஆயிரத்து 800 ரூபாவாகவும் ஒரு கிலோ கணவாய் ஆயிரத்து 600 ரூபாவாகவும் ஒரு கிலோ மீன் ஆயிரத்து 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. நாட்டில் அனைத்து பொருட்களும் விலை அதிகரித்து காணப்படுகின்ற போது மீன்களின் விலையும் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.