செலுத்தப்படாத விவசாய கடன்கள் தள்ளுபடி
நெல் விவசாயிகளினால் பெறப்பட்டு செலுத்தப்படாத விவசாய கடனை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இரண்டு ஹெக்டேருக்கு அல்லது அதை விட குறைவான அளவில் நெற் பயிர் செய்கைக்காக அரச வங்கிகளில் ஊடாக பெறப்பட்டு தற்போதைய நிலையில் செலுத்த முடியாத முதன்மை கடன் தொகையை தள்ளுபடி செய்ய இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.