யாழில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்
யாழ்.காரைநகர் – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் காரைநகர் இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்த வன்முறை கும்பல் பேருந்தின் மீதும் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, காரைநகரிலிருந்து கொழும்பு செல்வதற்காக யாழ்ப்பாணம் நகர்ப்பகுதி நோக்கி பேருந்து புறப்பட்ட நிலையில்
காரைநகர் – பீச் றோட்டில் பேருந்தை வழிமறித்த வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் காரைநகர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் 3வது சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.