யாழில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு
யாழ்.பலாலி விமான நிலையத்தின் விஸ்த்தரிப்பு பணிகளுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம், தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன்
அந்தந்த காணி உரிமையாளர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு வருமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.