யாழில் மலசலகூடத்தில் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்


யாழ்ப்பாணம், கோப்பாயில் நேற்று (16) மாலை முதியவர் ஒருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மலசலகூடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை மரண பகுதியில் கார்த்திகேசு திருப்பதி (திருப்பதி மாஸ்டர்) எனும் 65 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனிமையில் வசித்து வந்த இவரது வீட்டின் பின்பகுதியில் குப்பை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது.

வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவர் சடலத்தை கண்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் முதியவரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியும் சிறிது காலத்தின் முன்னரே குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *