யாழில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது
யாழ்.தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் 37 வயதான குறித்த பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.