மன்னாரில் இருந்து தமிழகத்திற்கு செல்ல முயற்சித்த 14 பேர் கைது


மன்னார் – பேசாலை கடற்பகுதி ஊடாக தமிழகத்திற்கு செல்லவதற்கு முயற்சித்த 14 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட 14 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கைதானவர்களில் அதிகம் பேர் வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தொியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *