ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கத்திக்குத்து – இளைஞர் வெட்டிக்கொலை
வாரியபொல – ரம்புகனன வெலவ பிரதேசத்தில் இன்று (13) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மோதலின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் இளைய சகோதரரும் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் கிராமத்தில் உள்ள ஒரு குழுவினருக்கும் இடையில் சில காலமாக ஏற்பட்டு வந்த தகராறுகொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த நபர் மற்றும் காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.