ராஜபக்சக்களுக்கு சாமரம் வீசிவந்த தமிழ் அரசியல் வாதிகள் மாயம்
‘கிழக்கை மீட்க’, ‘வடக்கை ஒளிமயமாக்க’ என்று கூறி ராஜபக்சக்களுக்கு சாமரம் வீசிவந்த சில தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், தலைவர்களை காணவில்லை என்று தொகுதி மக்கள் தேடி வருகின்றார்கள்.
‘விடுதலைப் புலிகளை அழித்த தாணைத் தலைவர்’ என்று மகிந்த ராஜபக்சவை மேடை மேடையாகப் புழந்துவந்த கருணா, ராஜபக்சக்கள் எதனைச் செய்தாலும் அவற்றை நியாயப்படுத்தி வாதிட்டுவந்த டக்ளஸ், ராஜபக்சக்கள் சார்பாக கொலைகள் பல புரிந்த பிள்ளையான், வாக்களித்த தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு ராஜபக்சக்களின் பக்கம் தாவிய வியாழேந்திரன்.. இப்படி பல மக்கள் பிரதிநிதிகள் தற்பொழுது தலைமறைவாகிவிட்டதாக தொகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.
மக்களின் அன்றாட பிரச்சளைகள் பற்றி பேசுவதற்காக இவர்களைத் தொடர்புகொள்ள முற்பட்ட வேளைகளில், ‘அவர்கள் தொடர்பு எல்லைக்குள் இல்லை’ என்ற பதில் வருவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும், ஒரு சிலர் பலத்த பாதுகாப்போடு பதுங்கியிருப்பதாகவும் அறியவருகின்றது.
நாடு பற்றி எரிகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், இவர்களில் யாரும் மக்களோடு இல்லை என்பது வேதனையளிக்கின்றது
..