குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் அமைப்பு முக்கிய அறிவிப்பு
குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழ்ந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
66 குழந்தைகள் பரிதாபமாக பலி
அத்துடன், மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலீன் கிளைக்கால் இரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ளது.
இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் இரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இரண்டு மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிவித்துள்ளது.
மேலும் இதற்கு முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின் தயாரிப்புகளால் கம்பியாவில் 66 குழந்தை இறப்புகள் ஏற்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளின் பயன்பாட்டைக் கைவிடுமாறு அந்த அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டமை பல எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.