கொழும்பு அதிவேக வீதியில் பேருந்து ஓட்டும் பெண்
இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நாளுக்கு நாள் பல்வேறு துறைகளிலும் பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி சாதித்து வருகின்றனர். இந்தநிலையில் இலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவர் கொழும்பு அதிவேக வீதியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகின்றமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.
இவர் தனது கடின உழைப்பினால் சாதிக்கவேண்டும் என்ற நோக்கோடு பயணிக்கும் சிங்கப்பெண்ணாக காணப்படுகின்றார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.