ஜேர்மனியின் பேர்ளினில் நேற்றிரவு இடம்பெற்ற பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது 174 பேர் கைது செய்யப்பட்டதுடன் , 65 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
இதன்போது உத்தரவினை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
கற்கள் எரிபொருட்கள் வீசப்பட்டதாலும் ஆர்ப்பாட்டக்காராகள் பொலிஸாரை மீறியதாலும் 65 பொலிஸார் காயமடைந்துள்ளதாகா பேர்ளின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
174 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜேர்மனி பொலிஸார் 65 பேரை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அராபியர்கள் அதிகமாக வாழும் நியுகோலான் பகுதியில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் நியுகோலானை காசாவாக மாற்றுமாறு டெலிகிராம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.