கிளிநொச்சியில் சகோதரர்களுக்கிடையில் மோதல் – அண்ணன் கொலை
கிளிநொச்சி, தருமபுரம் கல்லாறு பகுதியில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லாறு பகுதியில் வசிக்கும் சகோதரர்கள் இருவருக்கும் இடையே கையடக்க தொலைபேசி தொடர்பாக முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது தகராறாக மாறியது.
சகோதரர்கள் இருவருக்குமிடையில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், தம்பி கத்தியால் தாக்கியதில் மூத்த சகோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.