யாழ்.பலாலி சேவையில் ஈடுபடும் இ.போ.ச பேருந்தினால் சிரமபடும் மக்கள்


இலங்கை போக்குவரத்து சபையின் 764 வழி இலக்கம் உடைய யாழ்.பலாலி வீதியில் சேவையில் ஈடுபடும் இரவு நேர பேருந்துகள் உரிய நேரத்தில் புறப்படுவதில்லை என பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து யார் பலாலி வீதியால் புன்னாலைக் கட்டுவேன் வரை செல்லும் 764 வழி இலக்கப் பேருந்து இவ்வாறு உரிய நேரத்தில் புறப்படுவதில்லை.

என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். யாழ்.பிரதான பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6. 45 க்கு புறப்படும் பேருந்து 7 மணிக்கு புறப்படுவதாகவும் பின்னர் 8:40க்கு அடுத்த பேருந்து புறப்படுவதாக கூறப்படுகிறது.

எனினும் இடைப்பட்ட நேரத்தில் அதிக அளவிலான பிரயாணிகள் பிரதான பேருந்து நிலையத்தில் காத்திருப்பு நிலையில் வெகு நேரத்துக்கு பின்னே அடுத்த பேருந்து புறப்பட தயாராக இருப்பதாக குற்றச்சாட்டுகின்றனர்.

ஆகவே இடைப்பட்ட நேரத்தில் வர்த்தக நிலையங்களில் கடமை ஆற்றுபவர்கள் பகுதிநேர வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் வீடு செல்வதற்காக 8.40 வரை காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் தான் ஆராய்வதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *