யாழ் தொண்டைமானாற்றில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை(11) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

வற்றாப்பளை கண்ணகி அம்மன் – பாக்கு தெண்டல் பாரம்பரிய கைங்கரியம் இன்று
வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் 2022 இதன் ஆரம்ப நிகழ்வான பாக்கு தெண்டல் [...]

இலங்கையில் மீண்டும் கொவிட் அதிகரிக்கும் அபாயம்
புதிய பிறழ்வுடன் நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார [...]

ஈரான் அதிபரின் ஹெலிகொப்டர் விபத்து – காரணம் வெளியானது
மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை [...]