யாழ் பருத்தித்துறையில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
யாழ்.பருத்தித்துறை – தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 4 மணியளவில் தும்பளை – செம்மண்பிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வீட்டின் மதிலில் ஏறி நின்றபோது மதிலுடன் சேர்ந்து விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த நிலையில்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.