யாழில் மூடநம்பிக்கையால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்

யாழ்.நாவாந்துறையில் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருந்து எடுக்காமல் கோவிலுக்கு கூட்டிச் சென்று நுால் கட்டிவிட்டு காத்திருந்தமையால் 8 மாத குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று, பூஜை செய்து, நூல் கட்டியுள்ளனர்.
இருப்பினும், குழந்தைக்கு வயிற்றோட்டம் நிற்காத காரணத்தால், மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை குழந்தையை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையிலேயே குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
அதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குழந்தையின் மரண விசாரணையின் பின்னர், வயிற்றோட்டம் காரணமாக அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டே குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
Related Post

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 20 தொடக்கம் 25 வீதத்தினால் வீழ்ச்சி
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 தொடக்கம் 25 வீதம் வரையில் [...]

மீண்டும் செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையம்
கோளாறு காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் செயலிழந்துள்ளது. [...]

A/L பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
கல்விப்பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி [...]