யாழ். கொடிகாமத்தில் புகையிரத பாதையை முடக்கி மக்கள் போராட்டம்
யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பான கடவை அமைத்து தரக்கோரி மக்கள் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
புகைரத பாதையின் குறுக்கே சிவப்பு துணியை கட்டியதுடன், ரயர்களை போட்டுக் கொழுத்தி பெரும் களேபரம் நடத்தியிருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்றிருந்த பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு ஒருவர்
நியமிக்கப்படும் வரையில் பெலிஸார் ஒருவரை கடமைக்கு அமர்த்துவதாக கூறியிருக்கின்றனர்.