அரச பேருந்து மீது கல்வீச்சு – இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்
மீபே பகுதியில் வைத்து பதுளை – கொழும்புக்கிடையிலான அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த இரு பயணிகள் தற்போது கொழும்பு கண் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நேற்று (11) இரவு 8:00 மணியளவில் மீப்பே, துன்னான பகுதியில் வைத்து பேருந்து மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.