யாழ்.பருத்தித்துறை நகரில் பெண்களுக்கு தொடர் தொல்லை -13 பேர் கைது
யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதிகளில் நின்று பெண்களுக்கு தொந்தரவு கொடுத்த 13 பேர் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை நகரில் நின்று வீதியால் பயணிக்கும் பெண்களுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்றைய தினம் பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைத்து 13 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.