Day: December 12, 2022

இறைச்சி கடைகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு பூட்டுஇறைச்சி கடைகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு பூட்டு

மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று (12) முதல் ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு மாகாண [...]

3 நாட்களுக்கு ஏ-19 வீதி முடக்கம்3 நாட்களுக்கு ஏ-19 வீதி முடக்கம்

பொல்ஹாவல ரயில் கடவையில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாக, பொல்ஹாவல- கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. டிசெம்பர் 15ஆம் திகதி காலை 7 மணிமுதல் டிசெம்பர் 18ஆம் திகதி மாலை 6.30 மணிவரையிலும் அவ்வீதி [...]

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே விமான சேவைகள் இன்று ஆரம்பம்யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே விமான சேவைகள் இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் இன்று 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. அதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் இன்று திங்கட்கிழமை முதல் சென்னைக்கு பலாலியில் இருந்து விமான சேவையை ஆரம்பிக்கின்றது. [...]

அரச பேருந்து மீது கல்வீச்சு – இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்அரச பேருந்து மீது கல்வீச்சு – இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்

மீபே பகுதியில் வைத்து பதுளை – கொழும்புக்கிடையிலான அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த இரு பயணிகள் தற்போது கொழும்பு கண் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுநேற்று (11) இரவு [...]

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துஇரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

இன்று (12ஆம் திகதி) அதிகாலை 04.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அநுராதபுரம் டிப்போவிற்கு சொந்தமான இந்த இரண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் கொழும்பு குருநாகல் வீதியில் கார்வெல்ல [...]

திருகோணமலையில் மாயமான மீனவர் 16 நாட்களின் பின் மீட்புதிருகோணமலையில் மாயமான மீனவர் 16 நாட்களின் பின் மீட்பு

திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர், இலங்கை கடற்படையினர் நேற்று (11) மீட்டனர். 5 மீனவர்களுடன் பயணித்த “ஹிம்சரா” பல [...]

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புமாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று (12) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. [...]

அனியூரிசம் நோயை குணப்படுத்தி யாழ் போதனா மீண்டும் சாதனைஅனியூரிசம் நோயை குணப்படுத்தி யாழ் போதனா மீண்டும் சாதனை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம் தாயொருவர் நலம் பெற்றுள்ளார். இதுவரை காலமும் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை (Surgical clipping) முறை மூலம் மாத்திரம் [...]

யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்புயாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் [...]

ஆசிரியர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய அரசியல் கட்சி உறுப்பினர்கள்ஆசிரியர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய அரசியல் கட்சி உறுப்பினர்கள்

பண்டாரவளை – பூனாகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மீது தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் காயமடைந்த ஆசிரியர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரற்ற வானிலை காரணமாக, குறித்த பாடசாலை பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், அதனை [...]

போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வுபோராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு

இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம் எனும் தொனிப் பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்பண நிகழ்வில் [...]

சிறையில் உள்ள காதலனுக்காக 17 வயது சிறுமி செய்த காரியம்சிறையில் உள்ள காதலனுக்காக 17 வயது சிறுமி செய்த காரியம்

சிறையில் உள்ள காதலுனுக்கு ஐஸ் போதைப் பொருள் கொண்டு சென்ற 17 வயது சிறுமி ஒருவர் சிறைசசாலை உத்தியோகஸ்த்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தும்பரை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் [...]

சுவாச நோய்கள் அதிகரிப்புசுவாச நோய்கள் அதிகரிப்பு

தற்போதைய நாட்களில் கடுமையான குளிர் மற்றும் வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், [...]

பிற்பகலில் அல்லது இரவில் மழைபிற்பகலில் அல்லது இரவில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையில் [...]