யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே விமான சேவைகள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் இன்று 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன.
அதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் இன்று திங்கட்கிழமை முதல் சென்னைக்கு பலாலியில் இருந்து விமான சேவையை ஆரம்பிக்கின்றது.
வாரமொன்றுக்கு இந்த விமான சேலை நிறுவனத்தினால் நான்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று முதல் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகின்றது.