இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
இன்று (12ஆம் திகதி) அதிகாலை 04.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அநுராதபுரம் டிப்போவிற்கு சொந்தமான இந்த இரண்டு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் கொழும்பு குருநாகல் வீதியில் கார்வெல்ல சந்திக்கு அருகில் கொழும்பு நோக்கி பயணித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது பற்றிய கூடுதல் தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.