இலாபகரமான நிறுவனமாக மாறிய லங்கா சதொச


லங்கா சதொச நிறுவனம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நட்டத்தில் இயங்கிய லங்கா சதொச நிறுவனம் 57,000 இலட்சம் மாத வருமானத்தை ஈட்டும் இடமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விநியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதன் மூலமே இவ்வாறான ஒரு மாற்றம் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், 4000 ஊழியர்களுடனும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளுடனும் அதிகளவிலான பொருட்களை நிர்வகிப்பது இலகுவான காரியமல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள்,புத்தகங்கள் மற்றும் பென்சில்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *