யாழ் தாவடியில் வன்முறை கும்பல் வீடு புகுந்து அட்டூழியம்


யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை தகராறில் ஈடுபட்டவர்களை , வீட்டின் உரிமையாளர் , வீட்டின் முன் நின்று தகராறில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

அதனால் கோபமடைந்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டனர் அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தகராறில் ஈடுபட்ட 06 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *