தூக்கில் தொங்கிய பெண் வைத்தியர் – மரணத்தில் சந்தேகம்

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியரான பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடுகண்ணாவையில் உள்ள அவரது வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் இன்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

54 வயதுடைய குறித்த வைத்தியர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாட்டுக்கு அனுப்பும் போலி முகவர் கைது
சிக்கனத்தை கடைப்பிடிக்க தவறின் இவை ஏற்படும்
இவர் பேராதனை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கடுகண்ணாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்