அலரி மாளிகையில் மது போதையில் ஆளும் கட்சி அமைச்சர்கள்
அலரி மாளிகையில் கடந்த புதன் கிழமை ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இராபோசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனைவிமாரை அழைத்து வருமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருந்துபசாரத்தில் மது விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
எனினும் அமைச்சர் ஒருவர் விஸ்கி மதுபான போத்தல்களை கொண்டு வந்து விருந்து நடைபெறும் மண்டபத்தில் வெளியில் ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவே மதுபான போதல்களை கொண்டு வந்து அமைச்சர்களுடன் இணைந்து மது அருந்தியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த இடத்திற்கு சென்று அமைச்சர்களுடன் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.