20 வயது இளைஞன் மாயம் – தேடுதல் தீவிரம்
மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் மாவனெல்லை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஆராச்சியின் விதுஷிகா நவஞ்சன பண்டார என்ற ஐந்தடி ஏழு அங்குல உயரமான இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் கடந்த ஜூன் மாதம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் துறவற வாழ்வுக்குச் சென்றுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காக வீடு திரும்பிய அவர் விகாரைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடைசியாக குறித்த இளைஞன் தனது சகோதரியுடன் தொடர்பு கொண்டு தான் கேகாலையில் இருப்பதாகவும் அதன் பின்னர் இந்த இளைஞன் தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
காணாமல் போன இளைஞன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
காவல் நிலைய பொறுப்பதிகாரி மாவனெல்ல: 071 – 8591418
மாவனல்லை காவல் நிலையம்: 035 – 2247222