இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்வு
இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சுமார் ஏழாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், இடிபாடுகளில் சிக்கி, 377 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்த நிலையில், மேலும் 31 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.