பாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திய 5 மாணவர்கள் கைது


பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 5 பேர் நேற்று பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாணந்துறை கடற்கரையில் விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவணைப் பரீட்சை முடிவடைந்ததையடுத்து, பாணந்துறை மதுபானக் கடையில் பியர் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பெற்றோரை வரவழைத்து அறிவுரைகள் வழங்கிய பின்னர் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *