ரயிலில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் படுகாயம்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற விஷேட ரயிலில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் நேற்று மாலை ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிஹான் என்ற 15 வயது சிறுவனே விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயிலின் நடைபாதையில் வந்ததாகக் கூறப்படும் குறித்த சிறுவன் செல்பி எடுக்கச் சென்று தண்டவாளத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.
Related Post

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் பல வீதிகளில் நெரிசல்
5 அம்சங்களின் அடிப்படையில் இன்று (1) கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் [...]
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் பிரான்ஸில் முக்கிய பதவியில்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர் பிரான்ஸ் பொலிஸ் பிரிவில் முக்கிய பதவியில் இணைந்துள்ளார் [...]

யாழில் 3 வயது குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
யாழ்.ஊரெழுவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல்போயிருந்த 3 வயது குழந்தை கிணற்றிலிருந்து [...]