ஜனவரி 5ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு தொடரூந்து சேவைகள் இடம்பெறாது
ஜனவரி 5ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் தொடரூந்து சேவைகள் இடம்பெறாது என இலங்கை தொடரூந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு மாத்திரமே தொடரூந்துச் சேவைகள் இடம்பெறும்
இந்தநிலையில், அனுரதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளை ஏற்றிச் செல்ல பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறை – முறிகண்டி இடையே மாத்திரம் பயணிக்கும் யாழ்ராணி தொடரூந்து, குறித்த ஐந்து மாத காலப்பகுதியில் வவுனியா வரை சேவையில் ஈடுபடும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.