இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம்
அண்மையில் சீன அரசாங்கத்திடம் இருந்து இலவசமாக கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெய், மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை (23) காலை 8 மணியளவில் பாணந்துறை மீன்படி வளாகத்தில் இடம்பெறவுள்ளளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன் ஆகியோரின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதன்போது, மண்ணெண்ணெய் எரிபொருளைப் பயன்படுத்தும் 26,000 படகுகளுக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.