யாழில் ஆலய கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
யாழ்.நவாலி – மூத்த விநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நவரத்தினம் சுரேஷ் (வயது32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர் கிணற்றில் விழுந்த நிலையில் அப்பகுதியில் இருந்தோர் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார். மேலும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.