திருகோணமலைக்கு பெருமையை தேடிதந்த மாணவிகள்
தேசிய இலக்கிய விழாவில் மூன்று போட்டிகளில் செல்வி. அனா கிரேஸ் விமலன், செல்வி. அக்சா நிமங்ஷனி சுரேந்திரா ஆகிய மாணவிகள் 1ம் இடங்களைப் பெற்று, கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இக்கல்லூரியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் அதிபர் திருமதி. சுபா ஜோண் தேவதாஸ் அவர்களுக்கும், மாணவிகளை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திருமதி. அருள்லக்ஷ்மி சசிதரன், திருமதி. பிரவீனா தட்சாயனன் ஆகியோருக்கும் வாழ்த்துகள்.
இவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 17.11.2022 அன்று நடைபெறவுள்ள தேசிய இலக்கிய விழாவில் பரிசளிப்பு இடம்பெறுள்ளது.
மேலும் குறித்த மாணவிகளுக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் உள்ளது.