பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து ஐவர் தப்பியோட்டம் – தீவிர தேடுதல்
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து ஐவர் தப்பியோடியதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.
இன்று (15) மாலை 5.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வு இடம்பெறுகின்றது.
குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவரே விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போது தப்பித்து சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் தப்பிச் சென்றவர்களை தேடி கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.