இருவர் மீது கத்திக்குத்து – ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
வீதியால் பயணித்த பெண் ஒருவருடைய கைப் பையை பறிக்க முயற்சித்தபோது தவறி விழுந்த வழிப்பறிக் கொள்ளைக்காரியை மடக்கிப் பிடிக்க முயற்சித்தபோது கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டத்தில் அக்கரவிட்ட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும் பெண்ணும் அந்த வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த மற்றொரு பெண்ணின் கைப் பையை பறிக்க முயன்றபோது கொள்ளையனுடன் வந்த கொள்ளைக்காரி தவறி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இருவர் கொள்ளைக்காரியை மடக்க முயற்சித்தபோது மோட்டார் சைக்கிளை ஓட்டிய கொள்ளையன் குறித்த இருவர் மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளான் இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் 30 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றய நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.