நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளை (12) காலை 07 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் பதற்றமான சூழ்நிலைகளும் பதிவாகி வருகின்றன.
ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
Related Post

இலங்கையிலும் நிலநடுக்கம் – மக்கள் அச்சப்பட வேண்டாம்
புத்தள பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. [...]

இந்த வார இறுதியில் 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை இந்த வார இறுதியில் நாட்டை [...]

கிளிநொச்சியில் கடும் குளிரால் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி
கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் பலியாகியதுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் [...]