தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பலி

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாவந்தன் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குளவி கொட்டுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி தாக்குதலுக்கு இலக்காகி 60 மற்றும் 23 வயதுடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த முதியவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CALL NOW