புதிய எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்
உள்நாட்டுச் சந்தையில் புதிய எரிவாயு கொள்கலன்கள், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்காக, நாட்டில் உள்ள அவர்களது உறவினர்கள் சார்பாக டொலர்களை செலுத்தி எரிவாயு கொள்கலன்களை வழங்கும் வகையில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் செயற்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இவ்வாறு எரிவாயு கொள்கலன் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த விரும்புவதால் சமையல் எரிவாயுவின் தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.