இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை ஓமிக்ரோன் – மக்களுக்கு எச்சரிக்கை
புதிய வகை BA.4.6 ஓமிக்ரோன் துணை மாறுபாடு தற்போது இங்கிலாந்தில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தொற்று மாதிரியின் மொத்த பரிசோதனையில் BA.4.6 மாறுபாடு 9 வீதமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
BA. 4.6 உருவானமைக்கான காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் , BA .4.6 ஓமிக்ரோன் என்பது BA நான்கு மாறுபாட்டின் வழிதோன்றலாக கருதப்படுகின்றது.
எனவே பொதுமக்களை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.