குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு – ஜனாதிபதி அறிவிப்பு
எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தலைநகரில் மட்டுமன்றி அரை நகர்ப்புறங்களிலும் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் கிராமிய மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை திறமையாகவும் மனிதாபிமானமாகவும் தீர்ப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அந்த வீடுகளை வழங்குவதில் “தகுதியான” முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நாளைய தினம் 36 ஆவது உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.