தந்தை மற்றும் தாய் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் – தந்தை பலி, தாய் படுகாயம்
பக்கவாதத்தால் படுக்கையில் இருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மகனின் தாக்குதலில் தாயாரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
கலுகிஸ்ஸ கல்லுபர என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 70 வயதான வெலிகொட நோயல் டி சில்வா என்பவரே உயிரிழந்துள்ளார். பக்கவாத நோயால் படுக்கையில் இருந்த குறித்த நபரை அவரது மகன் தடியால் அடித்துக் கொன்றுள்ளான்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் என விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர்.
அதேவேளை சந்தேகநபர் தாயார் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில் அவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.