இலங்கையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 24 வயது இளம் தாய்
புத்தளம் வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் என்டன் பெர்னாண்டோ” தெரிவித்தார்.
ஒரு ஆண் குழந்தையும் மற்றும் மூன்று பெண் குழந்தைகளும் இவ்வாறு பிறந்துள்ளன.
தற்போது, குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சுரின் ஜெயவர்தன அவர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.