யாழ் இந்துக்கல்லுாரி சுற்றாடலில் போதைப் பொருளுடன் இளைஞன் கைது
யாழ்.இந்துக்கல்லுாரி சுற்றாடலில் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்க கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இளைஞன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனிடமிருந்து ஒரு தொகை போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.