யாழில் எலிக்காய்ச்சலால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் , முன்னதாக பலாலி இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் அங்கிருந்த மேலதிக சிகிச்சைக்காக கடந்த 25ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் 26ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்